பட்டாசு வெடிப்பது இந்து கலாச்சாரமே இல்ல… ஐபிஎஸ் அதிகாரியின் கருத்தால் வெடித்த சர்ச்சை!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

தீபவாளி பண்டிகையின்போது கொரோனா பரவல், காற்று மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருந்தன. இந்த தடை உத்தரவை கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியான டி.ரூபா வரவேற்று சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டார்.

அதில் “வேத மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பட்டாசு வெடிக்கப் படவில்லை. காப்பியங்களிலும் புராணங்களிலும் பட்டாசுகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை. எனவே இது இந்துகளுக்கு எதிரான செயல் என்று நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம். ஐரோப்பியர்களின் இந்திய வருகையால் பட்டாசுகள் முக்கியத்துவம் பெற்றன” என்று பதிவிட்டு இருந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் டி.ரூபா சில நாட்களாக அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

மேலும் சிலர் ரூபாவின் பதிவைக் குறித்து பிற மதங்களில் உள்ள பழக்க வழக்கங்களை இப்படி உங்களால் கேள்வி கேட்க முடியுமா? என்று கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவின் பண்டைய வேதங்களில் பட்டாசுகள் இருந்தது எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த நபரிடம் அதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு ரூபா கேட்டதும் அந்த சமூக வலைத்தளக் கணக்கு முடக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா முதற்கொண்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதில் ரூபாவிற்கு சம்மந்தம் இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் ரூபா தனது டிவிட்டர் கணக்கில் “டிவிட்டருக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சட்டங்களை மதிப்பதும் ஒரு அரசு அதிகாரிக்கு மிக முக்கியம். நீதிமன்றம் மூலமாக நீங்கள் சட்டங்களை கேள்வி கேட்கலாம். ட்விட்டரில் அல்ல” என்று காரசாரமாக பதில் அளித்து உள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் நடைமுறைகளை மதிப்பது என் கடமை. நான் மக்களை தவறாக வழிநடத்த மாட்டேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ரூபாவின் இந்த கருத்துக்குப் பலர் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்!!!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வினால் (நீட்) அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு

நான் என்றுமே உங்கள் விதைதான்: பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா!

'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த்

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்!!!

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா? எனக் கேலியாக ஒரு பழமொழி நம்ம ஊர் வழக்கத்தில் உண்டு.

வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!

மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது.