ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சி.ஆர்.சரஸ்வதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் ஐந்து நாள் பரோலில் வெளிவந்த நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 'இந்த அரசு உருவாக மாண்புமிகு சின்னம்மாதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம்' என்று கூறினார்
இதுகுறித்து கருத்து கூறிய தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி 'இந்த அரசு உருவாக சின்னம்மா தான் காரணம், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புக்கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து மேலும் ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் சின்னம்மா முகத்தை பார்த்த பின்னரும் உறுத்தாமல் இருக்குமா? என்று கூறினார்.
சி.ஆர்.சரஸ்வதி கூறுவது போல் செல்லூர் ராஜூவை தொடர்ந்து மேலும் சில ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments