அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு ஏன் சொன்னேன் தெரியுமா? சி.ஆர்.சரஸ்வதி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 'அம்மா இட்லி சாப்பிடுகிறார்', நலமாக இருக்கின்றார், அரசு பணிகளை மருத்துவமனையில் இருந்தே செய்கிறார்' என்று அதிமுகவினர் பலர் கூறினர். அவர்களில் ஒருவர் அதிமுக பேச்சாளரான சி.ஆர்.சரஸ்வதி
இந்த நிலையில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருந்த நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, 'அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நானாக கூறவில்லை. அப்பல்லோ மருத்துவர்கள் கூறியதைத்தான் நான் கூறினேன்.
ஒரு முதல்வரை பற்றி பேசும்போது என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும். நானாக எதையும் கூறமுடியாது. ஒவ்வொரு நாளும் நான் அப்பல்லோ பிரதாப் ரெட்டியை பார்த்து அம்மாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொள்வேன். லண்டன் டாக்டர் ரிச்சர்டை கூட இரண்டு முறை பார்த்துள்ளேன். அதேபோல் அன்றைய முதல்வர் ஒபிஎஸ் அவர்களிடமும் நான் கேட்பேன். அவர்கள் சொன்னதை வைத்து தான் 'அம்மா இட்லி சாப்பிட்டதையும் சொன்னேன்'. மேலும் நான் கூறியபோது அம்மா நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்த்தக்கது.
அதுமட்டுமின்றி இப்போது அம்மாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இனிமேலும் தொலைக்காட்சியில் இதை விவாதிப்பது சரியாக இருக்காது. அம்மாவுக்கு கொடுக்கப்பட்டது உலகின் மிகச்சிறந்த சிகிச்சை என்பது விசாரணை கமிஷனின் விசாரணையில் தெரியவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com