சூர்யாவை மிரட்டுவது, பாஜக-வின் கோழைத்தனம்.....! சிபிஎம் பிரமுகர் பதிலடி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நியாமான கருத்துக்களை கூறி வரும் நடிகர் சூர்யாவை மிரட்டுவது பாஜகவின் கோழைத்தனம் என, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா:
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019 என்பது, சென்று ஆண்டு, பிப்ரவரி 12-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட இந்த மசோதாவை, இனி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்கள்.
நடிகர் சூர்யா:
நீட் தேர்வு விலக்கு குறித்தும், பல சமூக பிரச்சனைகள் பற்றியும் ஆரம்ப காலங்களிலிருந்தே பேசி வருகிறார் நடிகர் சூர்யா. ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 பற்றியும் தமிழ்திரைத்துறையில், முதன் முதலில் குரல் கொடுத்தது இவர்தான். அண்மையில் "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல... இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்" என டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இவரைத்தொடர்ந்து வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், இதற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் இளைஞரணி கூட்டத்தில், சூர்யாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உண்மைக்கு புறம்பாக சூர்யா பேசிவருவதாக, பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் பேசினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
சிபி எம் கே.பாலகிருஷ்ணன்:
பல்வேறு தரப்பு மக்கள், மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் சூர்யா மீது மட்டும் எதிர்ப்பை காட்டுவது கண்டனத்திற்குரியது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
"திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்து உரிமைக்கும் எதிராக செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராக பாய்ந்துகொண்டிருக்கிறார்கள்.இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறைக் கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் எச்சரிக்கை"
என பதிலடி பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments