கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்போன இவருக்கு தற்போது 95 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நல்லக்கண்ணு அவர்கள் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு நுரையீரலில் லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் வயது மூப்பு காரணமாக மிகவும் கவனத்துடன் நல்லக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்த கொரோனா தொற்று தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை நடிகர் அமீர்கான், மாதவன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து மூத்த அரசியல் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com