இந்தியாவில் 50% குழந்தைகளுக்கு கொரோனா? பீதியை கிளப்பும் எய்ம்ஸ் இயக்குநர்!
- IndiaGlitz, [Monday,August 16 2021]
இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலோரி, இதுவரை இந்தியாவில் உள்ள 50% குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலோரி இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தாக்கம் இப்போது ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்கா விட்டால் இதுபோன்ற நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஏற்படுமா? இல்லையா? என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் இதுவரை 50% குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கூடவே அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வந்துவிடும். அப்போது இந்த நிலைமை மாறும். எனவே அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு கொரோனா தாக்கினாலும் அவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது எனத் தெரிவித்து உள்ளார்.