கொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,September 29 2020]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு அடைவதை ஏற்கனவே மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் அவர்களுக்கு அதிபயங்கரமான கனவுகள் வருவதாகவும் அதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் மனநிலை முன்பு இருந்ததைவிட தற்போது பல மடங்கு அசாதாரணமாகக் காணப்படுவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகைய முடிவுகள் எட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் முன்பு இருந்ததைவிட பல மடங்கு அழுத்தமான மனநிலைக் கொண்டவர்களாக மாறியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு அதிபயங்கரமாக கனவுகள் வருவதாகவும் அதன் அளவு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகமானது என்றும் கூறப்படுகிறது. சொந்தங்களால் கை விடப்படுதல், வேலை இழப்பு, பண இழப்பு மற்றும் வைரஸின் அதிக பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் வருவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பெண்களைப் பொறுத்த வரையில் இந்த அளவு மேலும் அதிகமாக இருப்பதாகவும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.