ஆதாரம் இல்லாமல் அச்சுறுத்தாதீங்க… சீன பெண் விஞ்ஞானியின் உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

சீனாவின் தேசிய வைராலாஜி நிறுவனத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி ஷி ஜெங்லி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நேர்காணலில் வைராலாஜி நிறுவனத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் ஒரு விஞ்ஞானி மீது குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சீனாவின் வைராலாஜி நிறுவனத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவி இருக்க வேண்டும் என்ற ஊகத்தை அமெரிக்க ஊடகங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெளியிட்டு வருகின்றன. அதோடு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸை சீனாதான் பரப்பியது என பொதுவெளியில் பகிங்கரமாகக் குற்றம் சுமத்தினார். இதனால் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல உலக நாடுகள் வைக்கத் தொடங்கின.

இதையடுத்து உலகச் சுகாதார அமைப்பு தாமாக முன்வந்து கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரித்து வருகிறது. அதற்கான முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் சீனாவின் வைராலாஜி நிறுவனத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றது என்பது போன்ற வலுவான குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதனால் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து 90 நாட்களில் விரைந்து விசாரித்து அதன் முடிவுகளை வெளியிடுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உளவுத்துறைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தற்போது கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க துவங்கி உள்ளன.

இந்நிலையில் தேசிய வைராலாஜி நிறுவனத்தின் உயர்மட்ட பெண் விஞ்ஞானி ஷி ஜெங்லி “உலகம் எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியாது. ஒரு அப்பாவி விஞ்ஞானியை தொடர்ந்து அச்சுறுத்தாதீர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு வைராலாஜி நிறுவனம்தான் காரணம் என்று கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் இப்படி ஆதாரமே இல்லாமல் குற்றம் சுமத்துவதால் எங்களை அவமதிக்கிறீர்கள் என்றும் ஷி ஜெங்லி கூறியுள்ளார். இதற்கு முன்பு வைராலாஜி நிறுவனத்தில் உலகச் சுகாதார அமைப்பு விசாரணையை மேற்கொண்டது. அந்த விசாரணையில் இங்கிருந்த யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கவில்லை. மேலும் இந்த வைராலாஜி நிறுவனத்தில் கொரோனா வைரஸின் மரபணு குறியீடுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள் ஏன் மீண்டும் மீண்டும் வைராலாஜி நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்துகிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஷி ஜெங்லியும் அவர்களது சகாக்கள் இருவரும் சேர்ந்து ஒரு குகைக்குள் சென்று வவ்வாலை குறித்து ஆய்வு செய்ததாகவும் அப்படி செய்த ஆய்வில் செயற்கையாக ஒரு வைரஸை உருவாக்கத் துவங்கியதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷி ஜெங்லி தற்போது மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மகளின் வீடியோவில் 'ஆனந்த யாழை' இணைத்த யுவன்: வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது என்பதும் 'தங்க மீன்கள்' என்ற படத்திற்காக இடம்பெற்ற

மூன்று மாதமாக காத்திருந்த ரசிகர்....! யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் ...!

தொடர்ந்து மூன்று மாதங்களாக யுவனின் போஸ்டுகளுக்கு ரிப்ளை செய்து வந்த ரசிகர்கருக்கு, யுவன் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

'பிகில்' நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் 'எப்ஐஆர்' 'மழையில் நனைகிறேன்'

லெஜண்ட் சரவணனின் ஜோடி இப்போ சேரு பூசின பாடி: வைரல் புகைப்படம்!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்

கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு