தமிழகத்தில் டாஸ்மாக் செல்ல 15 கட்டளைகள்… என்னென்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கு, வெளியூர்- வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் வரத் தடை, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை, வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகள் முழுநேர ஊரடங்கு, மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்து, மாநகராட்சியில் இயங்கும் பேருந்துகளும் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும், அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் பகலில் இயக்கப்படும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் வரும் வாடிக்கையாளர்களுக்கு என்ன விதிமறை என்பது குறித்து தமிழக அரசு தற்போது புது அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில்
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக் கூடாது.
இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முகக்கவசம் கையுறைகள், மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
கடையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். கடைப் பணியாளர்கள் வேலைநேரத்தில் கிருமிநாசினி திரவத்தை குறைந்தது 5 தடவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்வதுடன் கடையை சுற்றிலும் ப்ளீச்சிங் பவுடரைத் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுப்பிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வரச் செய்தும், முகக்கவசம் அணிந்து வர செய்தும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.
கடைப் பணியாளர்கள் மதுப்பிரியர்கள் கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்காமலும் கடையில் அதிக கூட்டம் சேராமலும் பொது இடங்களில் மது அருந்துவதை தடை செய்து பணிபுரிதல் வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
குறைந்தது 50 வட்டங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் பொருட்டு கடையில் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும்.
விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வையின்படி தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும்.
21 வயது நிரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபான விற்பனை செய்தல் கூடாது. எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்தல் கூடாது என்பது போன்ற விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout