கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆண்மை குறைபாடு வருமா? அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களின் விந்துவில் கொரோனா வைரஸ் மரபணு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதிப் படுத்தினர். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புதிய ஆய்வு ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆண்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் இந்த கொரோனா வைரஸ் ஆண்களின் விந்து வீரியத்தை இழக்க செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்த கருத்துகள் அனைத்தும் ரீபுரொடெக்ஷன் எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக காய்ச்சல் தொடர்பான நோய்களினால் விந்து உற்பத்தியில் தாக்கம் ஏற்படும் என்று விஞ்ஞான உலகம் கூறிவந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் ஆண்மைக் குறைப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஆண்களின் விந்து சக்தியில் குறைபாடு ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த ஆய்வுக் கருத்தை சில நிபுணர்கள் மறுத்தும் வருகின்றனர். காரணம் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் மட்டுமே வருகின்றன. அதுவும் வயதானவர்களையே இது அதிகம் தாக்குகிறது எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ள ஆய்வில் கொரோனா வைரஸின் துகள்கள் நுரையீல் மட்டுமல்லாது, கிட்னி, குடல், இருதயம், ஆணின் குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தி செய்யும் ஹார்மோன்களிலும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் பாதித்த ஆண்களுக்கு அந்நோய் தாக்கத்தின்போது, ஆண்மைக் குறைபாடு மற்றும் விந்தணு வீரியம் குறையும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இப்பிரச்சனையில் இருக்கும் ஒரே நிம்மதி கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும்போது மீண்டும் அவர்களின் விந்தணு வீரியம் அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments