2 மணி நேரத்திற்குதான் ஆக்சிஜன் தாங்கும்… மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவின் இரண்டாம் அலை தொற்றால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மேலும் இந்த மாநிலங்களில் படுக்கை வசதியைத் தவிர ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் இந்த மருத்துவமனையில் மட்டும் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்றுவரும் 60 பேர் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த அறிக்கைக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ள தீர்ப்பு ஒன்றில் யாரிடம் பிச்சை எடுத்தாவது, கடன் வாங்கியாவது மருத்துவமனைகளில் ஏற்பட்டு இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்து இருந்தது. இதையடுத்து தற்போது ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான டெண்டரை வழங்குமாறு மத்திய அரசு உரிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் போதிய சிகிச்சை இல்லாமல் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஆக்சிஜன் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் மற்றும் பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என அதன் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து கொரோனா நோயாளிகளிடம் கடும் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout