ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்??? அதிரடி தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

 

ரஷ்யாவின் கமலயோ தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் நிறுவனம் மற்றும் ராணுவ ஆய்வு மையம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் தயாரித்த ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி அனைத்துக்கட்ட சோதனைகளையும் முடித்துக் கொண்டு அந்நாட்டின் மருந்துவக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டதாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 11 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனால் ரஷ்யாவிற்கு உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கமலயோ நிறுவனத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்கர் தெரிவித்து இருக்கிறார். தடுப்பூசியின் பதிவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகளை முடிக்க குறைந்தது 2-3 வாரங்கள் பிடிக்கும். சில நேரங்களில் இப்பரிசோதனையை முடிக்க ஒரு மாதம் அல்லது 6 மாதங்கள் கூட ஆகலாம். பதிவுக்குப் பின் நடத்தப்பட வேண்டிய பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இத்தடுப்பூசி பெருந்திரளான மக்களுக்கு கிடைக்க வெகுகாலம் ஆகலாம். ஆனால் குறைந்த பயன்பாட்டுக்கு மிக விரைவில் கொண்டு வரப்படும் எனவும் அலெக்சாண்டர் தெரிவித்து இருக்கிறார். உலகிலேயே முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இருக்கிறது. இதனால் மிக விரைவில் இயல்பு நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

More News

கொரோனா பீதியில் உதவிக்கு ஆளில்லை… அப்பாவின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற கொடுமை!!!

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அரசியலில் கமல் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை: தமிழக அமைச்சர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! அதிரடி காட்டும் புதிய திட்டம்!!!

அமெரிக்காவில் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் எளிய வழிமுறை அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்: பிரபல இசையமைப்பாளர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி சிக்கிரம் குணமாக வேண்டும்: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்