கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் நபர்!!! வைரலாகும் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் தன்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிகிச்சைக்காக கொரோனா வார்டில் இருக்கும் அந்தக் கைதி கைவிலங்குகளுடன் மது அருந்துவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விசாரணைக்கு அம்மாநில முதல்வர் தற்போது உத்தவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளியான சாந்து குப்தா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. சோதனையில் கொரோனா இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதனால் தன்பாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பெறவந்த இடத்தில் அதுவும் கொரோனா வார்டில் உட்கார்ந்து கொண்டு வகை வகையான உணவுகளுடன் குற்றவாளி சாந்து குப்தா மது அருந்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதற்கட்டமாக இந்தப் புகைப்படம் உண்மைதானா என்பது போன்ற விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த விசாரணையில் புகைப்படம் உண்மைதான் என்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா வார்டில் எப்படி மது அருந்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. குற்றவாளிக்கு யார் மதுவைக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பது போன்ற சராமாரி கேள்விகளை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.