கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய சி.ஏ. தேர்வுக்காக படித்து வருகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கல்விமுறையே மாறிப்போய் விட்டது. அதோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்தப் பெரும்தொற்று பல்வேறு மாற்றங்களை ஏற்பட்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டின் பெரும் அரக்கன், பெரும் சுனாமி இப்படி எத்தனையோ பெயர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் இந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது இரண்டாம் அலையை வீசி வருகிறது. இந்தச் சீற்றத்தில் இருந்து தப்பித்துவிட்டால் போதும் எனப் பல உலக நாடுகள் நினைத்து வருகின்றன.
இப்படியான மனநிலையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகள் எனப் பலரும் கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒடிசா மாநித்தின் கஞ்சம் பகுதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிறிதும் மனக்கலக்கம் இன்றி தனது சி.ஏ தேர்வுக்கு படித்து வருவது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தனது பதிவில் “உங்களுடைய அர்ப்பணிப்பு உங்களுடைய வலியைப் போக்கும். அதன்பிறகு வெற்றிதான் உங்களுக்கு” எனப் பதிவிட்டு உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கொரோனா வார்டில் அமர்ந்து படித்துவரும் இந்த இளைஞரின் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Success is not coincidence. You need dedication. I visited Covid hospital & found this guy doing study of CA exam. Your dedication makes you forget your pain. After that Success is only formality. pic.twitter.com/vbIqcoAyRH
— Vijay IAS (@Vijaykulange) April 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com