கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய சி.ஏ. தேர்வுக்காக படித்து வருகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கல்விமுறையே மாறிப்போய் விட்டது. அதோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்தப் பெரும்தொற்று பல்வேறு மாற்றங்களை ஏற்பட்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டின் பெரும் அரக்கன், பெரும் சுனாமி இப்படி எத்தனையோ பெயர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் இந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது இரண்டாம் அலையை வீசி வருகிறது. இந்தச் சீற்றத்தில் இருந்து தப்பித்துவிட்டால் போதும் எனப் பல உலக நாடுகள் நினைத்து வருகின்றன.

இப்படியான மனநிலையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகள் எனப் பலரும் கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒடிசா மாநித்தின் கஞ்சம் பகுதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிறிதும் மனக்கலக்கம் இன்றி தனது சி.ஏ தேர்வுக்கு படித்து வருவது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தனது பதிவில் “உங்களுடைய அர்ப்பணிப்பு உங்களுடைய வலியைப் போக்கும். அதன்பிறகு வெற்றிதான் உங்களுக்கு” எனப் பதிவிட்டு உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கொரோனா வார்டில் அமர்ந்து படித்துவரும் இந்த இளைஞரின் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More News

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு… அறிவிப்பு வெளியிட்ட சீரம்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சை கேள்விக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் சாந்தமான பதில்!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பிய நிலையில்

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு, செல்போனும் சுவிட்ச் ஆப்: பெரும் பரபரப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுமார் 3000 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் அவர்கள் தங்களுடைய வீடுகளையும் காலி செய்துவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும்

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்காதது அரசுக்கு வெட்கக்கேடு ...! உபி குறித்து கூறிய உயர்நீதிமன்றம்...!

மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்காதது வெட்கக்கேடானது என உத்திரப்பிரதேச அரசாங்கத்தை, அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது. 

உபி-யில் சிகிச்சையில்லாமல் தவிக்கும் செய்தியாளர்...! உபி..அரசுக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்றம்...!

சிறையில் உள்ள செய்தியாளர் சித்திக் கப்பனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால்,