ஊரடங்கால் காணாமல் போன பாக்டீரியா… ஆச்சர்யத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இதுபெரும் அழிவு எனக் கருதப்பட்டாலும் கொரோனா காரணமாக சில நல்ல விஷயங்களும் நிகழ்ந்துள்ளன.
அதாவது கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. அதுவும் பரவல் அதிகம் உள்ள நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஊரடங்கால் பாக்டீரியா கிருமிகளின் பரவல் குறைந்து இருக்கிறது. அதுவும் பாக்டீரியாவால் பரவும் நிமோனியா, மூளைக்காய்ச்சல், செப்சீஸ் போன்ற ஆபத்தான நோய்த்தொற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து இருக்கிறது என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வின் மூலம் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த ஊரடங்கானது நோய்க்கிருமிகள் பரவும் தன்மையைக் குறைத்து இருக்கிறது என்றும் இதனால் ஆபத்தான நோய்க்கிருமிகள் முந்தைய அளவைவிட குறைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளில் தப்பித்து உள்ளனர். அதோடு குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
அதுவும் கடந்த ஜனவரியில் இருந்து மே மாதம் வரை இதுபோன்ற நோய்த்தொற்று கிருமிகளின் அளவு முற்றிலும் குறைந்து வெறும் 6 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உலகம் முழுவதும் பதிவாகி இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரெங்டோகோக்கஸ் அல்கலக்டியா எனும் நோய்கிருமி மட்டும் குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு செய்யப்படும்போது கொரோனா தவிர மற்ற நோய்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்தும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com