கொரோனா 3 ஆவது அலை முடிவுக்கு வருமா? மூத்த விஞ்ஞானி கூறிய பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை துவங்கிவிட்டதை மத்திய அரசின் நோய்த்தடுப்புக்கான தேசியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை என்ன செய்யும்? எப்போது முடிவுக்கு வரும்? என்பதற்கான விடையை மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதில் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஒமைக்ரான் வேரியண்ட். இதுவரை இந்தியாவில் 4,868 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று ஒரேநாளில் 407 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதில் மகாராஷ்டிரா 1,281, ராஜஸ்தான் 645, டெல்லி 546, கர்நாடகா 479, கேரளா 350 என ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 185 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மிக்சிகன் பல்லைக்கழகத்தின் டேட்டா விஞ்ஞானியும் தொற்றுநோய் துறையியல் நிபுணருமான பேராசிரியர் ப்ராமர் முகர்ஜி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமையைக் கூர்ந்து கவனித்து சில கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருகிறது.
இந்தப் பாதிப்பு அடுத்த 10 நாட்களில் கணிசமாகக் குறைந்துவிடும். ஆனால் அடுத்துவரும் 7 நாட்களில் மற்ற சில மாநிலங்களில் கொரோனா உச்சத்தைத் தொடும்.
இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு ஜனவரி இறுதியில் உச்சத்தைத் தொடும். அதே வேளையில் இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது. ஒமைக்ரானால் இந்தியாவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனால் 2 ஆவது அலையைப் போன்று 3 ஆவது அலையில் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு முக்கியமான காரணம் தடுப்பூசிதான்.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். இதனால் கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்கள் 100% கொரோனா தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஜனவரியில் உச்சத்தைப் பெறும் கொரோனா பாதிப்புகள் வரும் பிப்ரவரியில் முடிந்துவிடும் என ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout