பிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா? இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

இந்தியாவில் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு, அதன் அறிகுறிகள், சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு இருப்பதாக பீடியாட்ரிக்ஸ் எனும் மருத்துவ ஆய்விதழ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இதற்கு முன்பு கொரோனா பாதித்த தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவும் அபயாம் குறைவாக இருக்கிறது என உலகச் சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்து இருந்தது. இதனால் குழந்தை பெற்ற பின்பும் கொரோனா பாதித்த தாய்மார்கள் பாதுகாப்புடன் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்கலாம் எனக் கூறியிருந்தது.

ஆனால் தற்போது இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 20 க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவும் தன்மை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக கொரோனா பாதித்த 1,733 தாய்மார்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 143 பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் தற்போது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் கருப்பையில் இருக்கும்போது தாய்மார்களிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளுக்கு பரவுவதில்லை என்றும் பிரசவத்தின் போது ரத்தம் கலப்பதால் இதுபோன்ற பாதிப்புகளும் நோய் அறிகுறிகளும் அதிகரிக்கின்றன என்றும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா பாதித்த 143 குழந்தைகளில் 68 பேருக்கு வெறுமனே ஒரேநாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் தாய்மார்களிடம் இருந்து குழந்தைக்கு குறைந்த காலத்தில் பரவும் கொரோனா நோய்த்தொற்றை மருத்துவர்கள் நியோனேட்டுகள் என்று வகைப்படுத்தி உள்ளனர். மேலும் குறைந்தது 72 மணி நேரத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் குழந்தைக்கு கொரோனா இருப்பதை பெரினாடல் டிரான்ஸ்மிஷன் என்றும் அழைக்கின்றனர். 72 மணி நேரத்திற்குப் பின்பும் 21 குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பாதிப்புகளைத் தவிர சில குழந்தைகளிடம் அறிகுறிகள், சுவாசக் கோளாறு பிரச்சனையும் இருக்கின்றன. மேலும் இதில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் கொரோனா பாதித்த குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதுதான் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2020 முதல் தேசிய நியோனாட்டாலஜி (என்.என்.எஃப்) எனும் நிறுவனம் தனாக முன்வந்து இந்தியாவில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மருததுவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதித்த தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தகவல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரசவத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிறந்த குழந்தைகளின் சிகிச்சைக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

More News

ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்!

நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி செய்த போது அந்த காருக்கான நுழைவு வரி கட்ட வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது

தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் 'D43' படத்தின் முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர் 

ஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சீனா,

'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவான உருவான ஆந்தாலஜி திரைப்படம் 'நவரசா'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து