45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆக்ஸ்போர்ட் தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் இந்தியக் கண்டுபிடிப்பான கோவேக்சின் இரண்டு தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப் படுகின்றன. அதோடு முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த செயல்திட்டம் ஓரளவு முடிந்த பின் அடுத்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ள இணைநோய் கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து உள்ள நிலையில் மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து இனி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் 45 வயதுக்கு மேற்பட்ட யாரும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments