45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆக்ஸ்போர்ட் தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் இந்தியக் கண்டுபிடிப்பான கோவேக்சின் இரண்டு தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப் படுகின்றன. அதோடு முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த செயல்திட்டம் ஓரளவு முடிந்த பின் அடுத்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ள இணைநோய் கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து உள்ள நிலையில் மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து இனி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் 45 வயதுக்கு மேற்பட்ட யாரும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிமாறனுக்கு கலைப்புலி தாணு செய்த கெளரவம்!

46 ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான

5 கோடி பார்வையாளர்களை கடந்து பட்டையைக் கிளப்பும் “என்ஜாய் எஞ்சாமி“ பாடல்!

சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியிடப்பட்டது.

இந்த கை மண்வெட்டி பிடித்த கை- பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏல மையம்… விவசாயிகளுக்காக முதல்வரின் புது திட்டம்!

கடந்த 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதியில் விளைகின்ற காய்கறிகள் தான் கேரளா

தனுஷூக்கு விருது கிடைக்கும் என சிலமணி நேரங்களுக்கு முன்பே கணித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் தனுசுக்கு 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி