தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தொடர்ந்து ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்திற்கும் குறைவாக உள்ளது. கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில், சென்ற 24 மணி நேரத்தில் 6,895 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை - 24,36,819 பேர், கடந்த 24 மணி நேரத்தில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 194 பேர், சென்னை உயிரிழப்பு - 24 பேர், கோவை உயிரிழப்பு -19 பேர், இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை - 31,580 பேர், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 13,156 பேர், குணமடைத்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 23,48,353 பேர்.
சென்னை நிலவரம் என்ன...?
கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை - 6,886 பேர்
கோவிட் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை - 1,60,990 பேர், பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,06,84,519 பேர், 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை -410 பேர், தொடர்ந்து 5- ஆவது நாளாக, இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை :
கோவை - 870 பேர்
செங்கல்பட்டு - 286 பேர்
காஞ்சிபுரம் - 98 பேர்
மதுரை - 125 பேர்
கன்னியாகுமரி - 110 பேர்
திருவள்ளூர் - 191 பேர்
திருச்சி - 231 பேர்
திருப்பூர் - 434 பேர்
விருதுநகர் - 98 பேர்
ஈரோடு - 741 பேர்
சேலம் - 485 பேர்
நாமக்கல் -274 பேர்
தஞ்சை - 372 பேர்
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், மக்களிடம் சற்றே பயஉணர்வு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments