கொரோனா பாதித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடந்த கொடூரம்!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அம்மாநில எதிர்க்கட்சிகள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது கடுயைமான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் ஒரு தாய் அவரது 19 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு அடூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர். இந்நிலையில் அடூர் மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு இளம்பெண்ணை மாற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பெண்ணை அழைத்துக் கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் ஆள் நடமாட்டமே இல்லாத ஆரன்புழா என்ற இடத்தில் நிறுத்தி இருக்கிறார். நிறுத்திவிட்டு கொரோனா பாதித்த பெண் என்றும் பாராமல் அவரைக் கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். பின்னர் அந்த ஆம்புலன்ஸ் கொரோனா சிகிச்சை மையத்திற்கு சென்றிருக்கிறது. இச்சம்பவத்தால் கடும் பதட்டம் அடைந்த இளம்பெண் மருத்துவமனைக்கு சென்றவுடன் அங்கிருந்த தனது தாயிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார். உடனே அவர் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்த விவகாரம் போலீஸ்க்கு சென்றிருக்கிறது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் பெயர் நவுபுல்(29) என்றும் அவர்மீது ஏற்கனவே கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது என்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். தற்போது நவுபலை கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கேரளாவில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைரஜா இந்தச்சம்பவத்துக்கு கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருக்கிறார். மேலம் துருதிஷ்டமான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்கக்கூடாது எனத் தனது வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கட்டுப்பான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆம்புலன்ஸ் நிர்வாகம் தற்போது நிவுபலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. கேரளாவின் மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.

More News

ஐஏஎஸ் அதிகாரிகள் கெடுபிடி தாங்கல... வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நடக்கும் தேதிகள்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய் அரபு எமிரேட் நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியது

கைது செய்யப்பட்ட ராகினி திவேதி பாஜக உறுப்பினரா? கர்நாடக பாஜக விளக்கம்

கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் போதைப்பொருள் விவகாரத்தில் சமீபத்தில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கும்

சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தாரா? காங்கிரஸ் பெண் பிரமுகர்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சம்யூக்தா ஹெக்டே, சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்: பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா விடுமுறையில் நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு தாமிரபரணி ஆற்றில் திடீரென மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது