ஆகஸ்போஃர்ட் கொரோனா தடுப்பூசி- இந்தியர்களுக்கு முதலில் கிடைக்க வாய்ப்பு!!! பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
இங்கிலாந்தின் அஸ்ட்ரோஜெனெகா மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போஃர்ட் பல்கலைக் கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோஷீல்ட் தற்போது இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்தின் சார்பாக இந்தியாவின் 17 இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் 1,600 பேரிடம் கோஷீல்ட் 2 ஆம் கட்ட சோதனையில் இருப்பதகாவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரம் மருந்து நிறுவனம் ஆக்ஸ்பேஃர்ட் பல்கலைக் கழகத்துடன் கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தமும் போட்டிருக்கிறது.
இந்நிலையில் கோஷீல்ட் தடுப்பூசி மும்பையில் உள்ள கெம் மற்றும் நாயர் என்ற இரண்டு மருத்துவமனைகளில் தற்போது சிஏடாக்ஸ்I இன் இரண்டாம் கட்டச் சோதனையை வெற்றிகரமாக முடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் கோஷீல்ட் கொரோனா தடுப்பூசி தேவையான பாதுகாப்பு மற்றும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக வெற்றிகரமான ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பதகாவும் அறிக்கைகள் வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில் கோஷீல்ட் தடுப்பூசி கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக குறைந்தது 14-28 நாட்களில் ஆன்டிபாடிகளை உருவாக்கி விடுகிறது. ஏற்கனவே இத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதோடு டி செல்களையும் சேர்த்து உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் உலகளவில் கொரோனா தடுப்பூசியின் சோதனைக் கட்டத்தில் தற்போது கோஷீல்ட் வெற்றிகரமாக முன்னிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் தான் தயாரிக்க இருக்கும் கொரோனா தடுப்பூசியை முதலில் இந்தியர்களுக்கே வழங்க இருப்பதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த அடிப்படையில் தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கும் கொரோனா கோஷீல்ட் தடுப்பூசி இந்தியர்களுக்கே முதலில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஒரு அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.