குழந்தைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதார சேவை இயக்குநகரம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளன. அந்த வகையில் மக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் பயன்படுத்துதல், சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை-க்கு கீழ் பொது சுகாதார சேவை இயக்குநகரம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குநரகம் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.அவை பின்வருமாறு,
1. 5 வயதிற்குப்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியதேவையில்லை என்றும், 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2. மருத்துவர்களின் அறிவுரைப்படிதான் குழந்தைகள் மாஸ்க் அணியவேண்டும். மேலும் பெற்றோர்களின் மேற்பார்வையில் இருப்பது அவசியமாகும்.
3. 12 வயதிற்கும் அதிகமானவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. 18- வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை பயன்படுத்தக் கூடாது.
5. குழந்தைகள் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல் அவசியமாகும்.
6. நோயின் அறிகுறிகள் தென்பட்டாலோ, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, HRCT ஸ்கேன் எடுக்க வேண்டும்.
7. குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தால், 10-15mg/kg/டோஸ் பாராசிட்டமால் மாத்திரையை, 4 அல்லது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தரலாம். லேசான இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள், இளம்வயதினருக்கும், பெரிய குழந்தைகளுக்கும் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள மருந்தை டாக்டரின் அனுமதியுடன் எடுத்துக்கொள்ளவும்.
8. 12 வயதிற்கும் அதிகமான சிறுவர்கள், தினமும் 6 நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். சிறுவர்களின் கைகளில் பல்ஸ் மீட்டரை வைத்து இதயத்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்ளலாம். தற்சமயம் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94% குறைவாக இருந்தாலோ,உடல் சோர்வு, மயக்கம், சுவாசப் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டாலோ கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.
9. முக்கியமாக பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை தரக்கூடாது. இது அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மருத்துவர்களின் அறிவுரை என்பது அவசியமானதாக உள்ளது.
According to the guidelines issued by the Directorate General of Health Services (DGHS) for the management of #COVID19 among children below 18 years of age, Remdesivir has not been recommended and rational use of HRCT imaging has been suggested. pic.twitter.com/Ysv8ooxD0Y
— ANI (@ANI) June 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com