பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் தூக்கில் தொங்கிய காதலர்கள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஜஹான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் அவரது நெருங்கிய உறவினரான 18 வயது பெண் ஒருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் ஆனால் இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் மனமுடைந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

21 வயது இளைஞரின் தந்தை வேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாகவும் இதனையடுத்து அந்த இளைஞர் தனது தந்தையாரிடம் தான் காதலிக்கும் உறவினர் பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வாதம் செய்ததாகவும் ஆனால் தந்தை அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இளைஞரின் காதலியான 18 வயது பெண்ணின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து திடீரென இளைஞரும் அவருடைய காதலியும் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் இருதரப்பு பெற்றோர்களும் ஈடுபட்டிருந்த நிலையில் அருகிலுள்ள காட்டில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் இரு தரப்பு பெற்றோர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் இளம் ஜோடி தூக்கில் தொங்கி தங்களது உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மணமகன், மணமகள் உள்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா: அதிர்ச்சித் தகவல் 

கேரளாவில் சமீபத்தில் திருமணம் ஒன்று நடந்த நிலையில் மணமகன், மணமகள் மற்றும் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட 41 நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு உள்ளதாக வெளி வந்துள்ள தகவல்

ரூ.50 ஆயிரம் மின்கட்டணம்: அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை

இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் கொரோனாவால் ஏற்படும் அதிர்ச்சியை விட மின் கட்டணத்தால் ஏற்படும் அதிர்ச்சி தான் பலரை அதிர வைத்துள்ளது.

ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக பாதுகாக்கும் கீர்த்திசுரேஷ்

பிரபல இயக்குனர் ஏ.எல்விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

'ஸ்கை டைவிங்' பயிற்சியில் ஈடுபட்ட 72 வயது தனுஷ் பட நடிகர்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டது என்பதும்

மகள்களின் உதவியால் வயலை உழுத தந்தை: வழக்கம்போல் உதவிய நடிகர் சோனுசூட்

யாருக்காவது உதவி தேவை என்றால் சமூக வலைதளம் மூலம் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு டேக் செய்து உதவி கேட்டால் உடனே உதவி கிடைக்கும் என்பதும்,