காதல் திருமணத்தை தடுக்க பெற்றோர்களுக்கு உரிமை உண்டா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Tuesday,January 16 2018]
ஜாதி மாறி காதல் திருமணம் செய்பவர்களை பெற்றோர்கள் கெளரவ கொலை செய்து வரும் கொடுமை அதிகரித்து வரும் நிலையில் இந்த நிகழ்வுகளுக்கு சாட்டையடி தரும் வகையில் இன்று வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'ஜாதி மாறி காதல் திருமணம் செய்பவர்களை பிரிக்க அவர்களது பெற்றோர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ உரிமை இல்லை என்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளதனர்.
திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதை தடுப்பது சட்டவிரோதம் என்றும் சாதி மறந்து காதல் திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் என யாருக்கும் கிடையாது என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இரண்டு வெவ்வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுக்கவில்லை என்றால் நீதிமன்றமே கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பால் நாடெங்கிலும் உள்ள காதலர்கள் உற்சாகமடைந்து தங்கள் மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.