ஆதார் எண்ணை இணைக்க புதிய காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,March 13 2018]
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஆதார் எண்ணை, வங்கி எண், மொபைல் எண் உள்பட பல்வேறு ஆவணங்களில் இணைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்டி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதார் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு வலியுறுத்த முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கு பின்னராவது வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மார்ச் 31க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில்கள் நிறுத்தப்படுமா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.