வரிவிலக்கு வேண்டி மனு அளித்த நடிகர் சூர்யா.......! தள்ளுபடி செய்த நீதிமன்றம் .....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமான வரிக்கு வட்டி செலுத்துவலிருந்து விலக்கு வேண்டி, சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். சென்ற 2010 அக்டோபரில் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இதில் 2011-ஆம் வருமான வரித்துறையானது, கடந்த 2007-2008-ம் ஆண்டு மற்றும் 2008-2009 வருடங்களுக்கான, வருமான வரியை கணக்கீடு செய்து கூறப்பட்டது. ஆனால் சூர்யா தரப்பு சார்பாகவும், வருமான வரி சார்பாகவும் இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணைக்கு வருகையில், அந்த குறிப்பிட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் சூர்யா 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2018-ல் தன்னுடைய வழக்கில் 3 வருடங்களுக்கு பின் தான் முடிவு கூறப்பட்டதால், வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சூர்யா வழக்கு தொடரப்பட்டார். வருமான வரி சட்டப்படி ஒவ்வொரு மாதமும் சூர்யா 1% வட்டி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. "நான் முறைப்படி வரி செலுத்திவருகிறேன், வருமானவரித் துறை தான் இந்த தீர்ப்பாய கால தாமதத்திற்கு காரணம். அதனால் சட்டப்படி வட்டி வரிவிலக்கு பெற எனக்கு முழு உரிமை உள்ளது" என்று சூர்யாவின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறையினர் சோதனை செய்த 45 நாட்களுக்குள்ளே, சூர்யா வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் தாமதமாக தாக்கல் செய்தும், மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கும் சரியான ஒத்துழைப்பு தராததால் தான், சோதனை நடந்த பிறகும் முழு விவரங்களை முடியவில்லை. இந்த காரணங்களால் சூர்யாவிற்கு வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற உரிமை மறுக்கப்படுகிறது என வருமான வரித்துறை வக்கீல் வாதாடினார். அவரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, சூர்யா தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout