சுசித்ரா மீது கார்த்திக் குமாரின் ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசும் சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் என கார்த்திக் குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார் என்பதும் அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் சுசித்ரா மீது மானநஷ்ட வழக்கு தொடுத்த கார்த்திக் குமார் தனக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் சுசித்ரா அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி ஜூலை ஒன்றாம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.