கமல்ஹாசனின் 'குணா' திரைப்பட ரீரிலீஸ் எப்போது? நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ‘குணா’. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியான போதும் ‘குணா’ படத்தின் பாடல் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தை ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அதன் பதிப்புரிமையை வாங்கி உள்ளதால் ரிலீஸ் செய்ய தடை கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை அடுத்து ‘குணா’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பதிப்புரிமை காலம் 2013ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால் ரீரிலீஸ் செய்ய தடை உரிமை கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவருக்கு உரிமை கிடையாது என தயாரிப்பு நிறுவனங்களான பிரமிட், எவர்கிரீன் நிறுவனங்கள் வாதாடின.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ‘குணா’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினர். எனவே ‘குணா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.