இந்தியன் - 2 படத்தின் மீதான வழக்கு.. சுபாஷ்கரன், கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 படக்குழுவுக்கு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியன் - 2 திரைப்படத்திற்கு தடை கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‛இந்தியன்’ படத்திற்காக கமல்ஹாசனுக்கு வர்மக்கலையை ராஜேந்திரன் கற்று கொடுத்திருந்த நிலையில் ராஜேந்திரன் கற்று கொடுத்த முத்திரையை தடையில்லா சான்று பெறாமல் இந்தியன் -2 படத்தில் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக ’இந்தியன்’ முதல் பாகத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலையை தான் கற்று கொடுத்ததாகவும், அதற்காக தனது பெயரும் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றது என்றும், ஆனால் தற்போது ’இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தில் பயன்படுத்திய வர்மக்கலை முத்திரையை எனது அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தன்னிடம் அனுமதி வாங்கும் வரை ’இந்தியன் 2 ’படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments