தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினி மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ என்ற திரைப்படத்தில் சிகரெட் காட்சிகளின் போது, ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று சப்டைட்டில் வரவில்லை என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த காட்சியில் நடித்த தனுஷ், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இந்த படத்தை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் வாத பிரதிவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் தனுஷ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ’இந்த மனு செக்சன் ஐந்து என்ற பிரிவில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், செக்சன் 5 பிரிவு என்பது சிகரெட்டை விளம்பரப்படுத்தும் காட்சியில் நடிக்கும் குற்றத்தை சேர்ந்தது என்றும் ’வேலையில்லாத பட்டதாரி’ திரைப்படத்தில் தனுஷ் எந்த சிகரெட் நிறுவனத்திற்கும் விளம்பரம் செய்யவில்லை என்றும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் செக்சன் 5 பிரிவில் இந்த வழக்கு தொடர்ந்தது தவறு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்த தகவலை இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#Watch | "வேலையில்லா பட்டதாரி படத்திற்காக நடிகர் தனுஷ்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விவரம் என்ன..?" - தனுஷ் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் விளக்கம்!#SunNews | #VIP | #Dhanush | #MadrasHC pic.twitter.com/RAe8OZgopX
— Sun News (@sunnewstamil) July 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com