கொலையுதிர் காலம் படத்தின் தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,June 28 2019]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் ஜூன் 14ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் டைட்டிலில் வெளியான சுஜாதாவின் 'கொலையுதிர்காலம்' என்ற நாவலின் உரிமையை தான் பெற்றுள்ளதாகவும், எனவே இந்த டைட்டிலில் வெளியாகவிருக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் 'விடியும் முன்' என்ற படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் 'கொலையுதிர்க்காலம் திரைப்படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் 'கொலையுதிர்க்காலம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது
நயன்தாரா , பிரதாப் போத்தன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.