'சக்ரா' பட தடை உத்தரவில் திடீர் திருப்பம்: விஷால் ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Thursday,February 18 2021]

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்த நிலையில் தற்போது அந்த தடையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்திற்கு தடை கேட்டு டிரைடண்ட் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. நாளை இந்த திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையால் விஷால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’சக்ரா’ படத்திற்கு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் ’சக்ரா’ திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஷால், சாரதா ஸ்ரீநாத், ரெஜினா சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கேஆர்விஜயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், தியாகு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தளபதி விஜய் வேடத்தில் கெத்துக் காட்டும் டேவிட் வார்னர்… வைரல் வீடியோ!

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

பட்டதே போதும்… ஐபிஎல் ஏலத்தில் இருந்து திடீரென விலகிய சிஎஸ்கே வீரர்!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் மார்க்  வுட். இவர் கடந்த 2018 இல் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டார்

அடுத்த இரண்டு போட்டிகளில் இவரும் இல்லையா? கோலியின் முடிவால் அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் போட்டியின்போது பவுலிங்கில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அசத்தி இருந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர்

பிங்க் பால் போட்டியில் ஜொலிக்குமா? புது நெருக்கடியில் இந்தியக் கிரிக்கெட் அணி!

உலகக் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டிக்கான நுழைவினைப் பெறும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது.

அஜித் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தது இதற்குத்தான்!

தல அஜித் சற்றுமுன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.