ரூ.2.5 கோடி மோசடி வழக்கு.. விஜய் பட நடிகைக்கு வாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரூ.2.5 கோடி மோசடி வழக்கில் விஜய் படத்தில் நடித்த நடிகைக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த ’புதிய கீதம்’ என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் அமீஷா பட்டேல். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 47 வயதான இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் இவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் என்பவர் அமீஷா பட்டேல் மற்றும் அவரது பிசினஸ் பார்ட்னர் ஆகிய இருவர் மீது மோசடி, மிரட்டல் மற்றும் காசோலை திரும்பி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.
அமீஷா பட்டேல் திரைப்படம் தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.2.5 கடன் வாங்கியதாகவும் ஆனால் அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு திரும்ப தரவில்லை என்றும் அந்த பணத்திற்கான 2 காசோலைகள் கொடுத்த நிலையில் அந்த இரண்டு காசோலைகளும் பவுன்ஸ் ஆனது என்றும் தயாரிப்பாளர் அருண்குமார் சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments