மீண்டும் இணைகிறார்களா ஜெயம் ரவி - ஆர்த்தி? சமாதான பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவு..!
- IndiaGlitz, [Saturday,December 21 2024]
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் கூறப்பட்ட நிலையில், இருவரும் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்து விவாகரத்துக்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, இருவரும் நேரில் ஆஜராகினர்.
அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் அந்த பேச்சுவார்த்தை முடியவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, மீண்டும் சமரச மையத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவாகரத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த விசாரணையின் போது, இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை வாபஸ் பெற்று கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.