தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு.. நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சமீபத்தில் விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்படி விவாகரத்து செய்வதற்காக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நேற்று நீதிபதி சுபாதேவி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து அக்டோபர் 7ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் அவர்களை சேர்த்து வைக்க ரஜினி மற்றும் கஸ்தூரிராஜா தரப்பில் இருந்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பிலிருந்தும் தீவிர முயற்சி செய்யப்பட்டதாகவும் ஆனால் அது எதுவுமே பலிக்காத காரணத்தினால் தற்போது இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com