'எந்திரன்' கதை தொடர்பான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Thursday,July 08 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘எந்திரன்’ படத்தின் கதையை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் காப்புரிமை உரிமையை மீறி தன்னுடைய அனுமதி பெறாமலேயே இந்த திரைப்படம் எடுத்திருப்பதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்தார் இதனை அடுத்து ஆரூர் தமிழ்நாடன் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு வழக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரூர் தமிழ்நாடன் தரப்பில் எந்திரன் படத்தின் காதல் தன்னுடைய என்பதற்காக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்

காப்புரிமை தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு செய்ய சில வழிமுறைகள் இருப்பதாகவும் அத்தகைய வரம்புக்குள் இந்த மனு வராது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.

சமீபத்தில் ஷங்கருக்கு எதிராக லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதற்குள் 'பீஸ்ட்' சிங்கிளா? துள்ளி குதிக்கும் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம்

பா.ரஞ்சித்தின் 'சார்பாட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் 'சார்பாட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் டப்பிங் பணிகள்

அமெரிக்காவில் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலத்தின் தாயார்: வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதும் அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அவர் இன்று அதிகாலை திரும்புவார்

"நவரசா" ஆந்தாலஜி....! சுவாரசியமான தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல்....!

இந்த ஆந்தாலஜியில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் குறும்படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியங்களை, இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வரை சந்தித்தபின் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று சந்தித்த நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.