விஸ்வாசம் படத்திற்கு தடை: 3 ஏரியா அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாளை உலகம் முழுவதும் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த தடையால் அந்த பகுதி அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதி தொகையை 4 நாட்களில் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் விநியோகஸ்தர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணை செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று ஏரியாக்களில் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி கோவை பகுதி விநியோகஸ்தர் சாய்பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த முறையீட்டு மனு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.