தம்பதிகளே அந்த விஷயத்தை தள்ளி போடுங்க.....!அட்வைஸ் செய்யும் பிரேசில் அரசு....!
- IndiaGlitz, [Monday,April 19 2021]
கொரோனா வைரஸ் உலகெங்கும் தீவிரமாய் பரவி வருகிறது. பொருளாதார ரீதியாக மட்டுமில்லாமல், மக்களை மனஉளைச்சலுக்கும் உள்ளாக்கி காவு வாங்கி வருகிறது. உலகநாடுகள் ஊரடங்கு மற்றும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்து மக்களை பாதுகாத்து வருகிறது. பொதுமக்களும் கட்டுப்பாடுடன் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிரேசிலில் கொரோனாவால் நாளுக்கு மூவாயிரம் பேர் இறந்துவருகிறார்கள். இதுவரை 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக பிறந்த குழந்தைகள் கண்களை திறப்பதற்குள்ளே உயிரிழந்துவிடுகின்றனர். கண் திறந்து மூடுவதற்குள், குழந்தைகள் வாழ்க்கை பறிபோவது, பிரேசில் அரசை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் அந்நாட்டின் சுகாதாரத்துறை முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதுவும் பெண்களுக்காக அந்த அட்வைஸ்-ஐ வழங்கியுள்ளது.
அந்நாட்டின் இளம்தம்பதிகளிடம் கருவுறுதலை சில நாட்களுக்கு தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தல் செய்துள்ளது. இதற்கு காரணம், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறார்களாம். அங்கு கர்ப்பிணி பெண்கள் சோதனை மற்றும் பிரசவத்திற்காக செல்லும்போது, அவர்களுக்கும் தொற்று பரவிவிடுகிறது. இதனால் தொற்றானது குழந்தைகளுக்கும் எளிமையாக பரவி வருகிறது.
சென்ற ஆண்டு இந்தமாதிரி பாதிப்புகள் ஏற்படவில்லை, ஆனால் நடப்பாண்டில் கர்ப்பத்தின் போது பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், பிரசவத்தின்போது குழந்தைக்கும் வைரஸ் டைரக்ட்டாக அட்டாக் ஆகிவிடுகிறது. இதனால் பிறந்த சிலநாட்களில் குழந்தைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே இளம் தலைமுறையினர் கொரோனா காலம் முடியும்வரை, கர்ப்பம் தரிக்கும் காலத்தை தள்ளிப்போடவேண்டும் என்று பிரேசில் அரசு கூறியுள்ளது.