பேருந்தில் இருந்து திடீரென இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா படுத்தும்பாடு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்தில் பயணம் செய்ததை அறிந்ததும் அந்த பேருந்தில் என்ற சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனையடுத்து அவரும் அவருடைய மனைவியும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார்கள். பரிசோதனையின் முடிவு இரண்டு நாட்களில் கிடைக்கும் என அவருக்கு கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் அந்த நபருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடைய வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்ததால் அவருடைய மொபைல் போனுக்கு போன் செய்தனர். அப்போது அந்த நபர் மனைவியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பக்குவமாக அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா இருப்பதை சொல்லி, உடனே கண்டக்டரிடம் கூறி பேருந்தை நிறுத்துமாறும், மற்ற பயணிகளுக்கு தெரிந்தால் பயம் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் சோகத்துடன் பேருந்து கண்டக்டரிடம் சென்று தனக்கு கோரோனோ இருப்பதாகவும் எனவே தன்னை இதே இடத்தில் இறக்கி விட்டு விடும்படியும் கூறினார். அவர் கூறியதைக் கேட்ட கண்டக்டரும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து பேருந்திலிருந்து உடனே இறங்கி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதனை அடுத்து பேருந்து இருக்கும் இடத்தை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மூலம் தெரிந்து கொண்ட சுகாதாரத் துறையினர் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்பி இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். சக பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பதை அறிந்ததும் அலறி அடித்துக் கொண்டு ஓடிய பயணிகளால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com