தனுஷ் எங்கள் மகன். உரிமை கொண்டாடும் திருப்புவனம் தம்பதி

  • IndiaGlitz, [Friday,September 30 2016]

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் ரஜினியின் முத்த மருமகனாகவும் இருக்கும் நடிகர் தனுஷை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
சிவகெங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கதிரேசன் - மீனாள் தம்பதியினர்தான் இந்த பிரச்சனையை கிளப்பியுள்ளனர். கதிரேசன் சிவகெங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினர்களுக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பிளஸ் 1 படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி உள்ளதாகவும், நடிகரான பின்னர் இதுவரை தங்களை அவர் பார்க்க வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
சென்னைக்கு சென்று தனுஷை பார்க்க முயற்சித்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் இதுகுறித்து காவல்நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த தம்பதியினர் கூறுகின்றனர்.