பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!
- IndiaGlitz, [Wednesday,June 03 2020]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மணமக்கள் தங்களுடைய திருமணத்தை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு தாக்கல் செய்த மணமக்களுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் தங்களுடைய திருமணத்துக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் அவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவுடன் தங்களுடைய திருமணம் நடந்த புகைப்படங்களையும் அவர்கள் இணைத்துள்ளனர்
இந்த புகைப்படத்தை பார்த்த நீதிபதி திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் மாஸ்க் அணியாமல் இருப்பதும் திருமணத்திற்கு வந்த யாருமே மாஸ்க் அணியாமல் இருப்பதையும் பார்த்தார். உடனடியாக கொரோனா வைரஸ் காலகட்டத்தில் அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் திருமணம் செய்ததற்காக இந்த புதுமண தம்பதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்த பணத்தை அவர்கள் 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த பணத்தை மாஸ்க் வாங்க செலவு செய்து அந்த மாஸ்க்கை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிடவும் உத்தரவிட்டார்
மேலும் இந்த தம்பதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படியும் பஞ்சாப் மாநில போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது