இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகையே படாய்ப் படுத்திவரும் கொரோனா ஒருசில நாடுகளில் மட்டும் தலைக் காட்டவில்லை. உலகம் முழுவதும் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெருந்தொற்று என்பதால்தான் கொரோனாவை Pandemic என அழைக்கிறார்கள். இந்த பெருந்தொற்றில் இருந்து தற்போது வரை ஒருசில நாடுகள் தப்பித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்த ஒரு மாதத்தில் உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலகச் சுகாதார மையத்தின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் “கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே மிக வேகமாகவும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தும் காணப்பட்டது” எனக் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடல் திரவமான சளி, உமிழ்நீர் போன்றவற்றில் இருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இந்த கொரோனா வைரஸ் கடுமையான சுவாசக் கோளாறுகளை வரவழைத்து உலகம் முழுவதும் பல உயிர்களை காவு வாங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின் படி உலகம் முழுவதும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 220,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 980,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா இதுவரை 185 உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது ஒருசில நாடுகள் மற்றும் தீவுகளில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்கிறது.
கொமொரே (Comoros)
கிரிபதி (Kirivati)
லெசோதோ (Lesotho)
மார்ஷல் தீவு (Marshall Islands)
மைக்ரோனேஷியா (Micronesia)
நவ்ரூ (Nauru)
வட கொரியா (North Korea)
பலாவ் (Palau)
சமோவா (Samoa)
சாலமன் தீவுகள் (Solomon Islands)
தஜிகிஸ்தான் (Tajikistan)
டோங்கா (Tonga)
துர்க்மெனிஸ்தான் (Turkmenistan)
துவாலு (Tuvalu)
வனடு (Vanuatu)
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்க்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றன. அனைத்து நாடுகளும் இந்த பட்டியல் வரிசையில் வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலைமையை எட்டிப்பிடிக்கும் வரையில் சமூக இடைவெளி அவசியம் என்பதையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments