கொரோனாவிற்கு அதிகளவு நிவாரண நிதியை அள்ளிக்கொடுக்கும் நாடுகள்!!!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகநாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. எனினும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் பொருட்டு பலநாடுகள் திருப்பிக்கொடுக்க தேவையில்லாத வகையில் பலநிவாரணத் திட்டங்களை வகுத்துவருகின்றன. பலநாடுகள் கையிருப்பில் பணம் இல்லாவிட்டாலும் புதிதாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து மக்களுக்கு வழங்கிவருகின்றன. இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது எனத் தற்போது பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் உணவுப் பற்றாக்குறையை தடுப்பதற்காகப் பலநாடுகள் இந்தமுறையை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டியது அரசின் கடமையாக மாறிவிடுகிறது. அத்தகைய நெருக்கடி நேரத்தில் மொத்தஉள்நாட்டு உற்பத்தியை கணக்கில்கொண்டு நிவாரணப் பொருட்களாகவோ அல்லது பணமாகவோ அரசாங்கம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு நாடுகளும் இதற்காக அச்சிட்ட பத்திரம் அல்லது அந்த அளவிலான தங்கத்தை இருப்பில் வைத்துக் கொண்டு பணங்களை அச்சடிக்கின்றன. சிலநேரங்களில் அந்நியப்பணத்தை இருப்பாக வைத்துக்கொண்டு நாடுகள் அச்சடிக்கவும் செய்கிறது. இப்படி அச்சடிக்கப்படும் பணமானது நேரடியாக மக்களுக்கு போய்ச்சேரும்படி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

பேரிடர், கொள்ளைநோய், கொரோனா ஊரடங்கு என அனைத்து நிலைமைகளிலும் உணவு என்பது அத்யாவசிய தேவையாக இருக்கிறது. இத்தகைய நேரங்களில் நடுத்தர வர்க்கத்தினரே அல்லப்படும்போது தொழிலாளர்களின் நிலைமை அதைவிட கொடுமையாக மாறிவிடுகிறது. மக்களுக்கு தேவை இருக்கிறது, ஆனால் பொருட்களை வாங்க இருப்பு இல்லை. இருப்பை அரசாங்கம் வழங்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். நுகர்வை பொறுத்து பொருட்களின் தேவையும் அதிகரிக்கும். பொருட்களின் தேவைக்கேற்ப உற்பத்தியும் அதிகரிக்கப்படும் என்ற உற்பத்திச் சங்கிலித் தொடரை மனதில் வைத்துக்கொண்டே அரசாங்கம் இருப்பை மீறி பணத்தை அச்சடிக்கத் துணிகிறது.

கொரோனா நிவாரண நிதியைப் பல நாடுகள் கிள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சில நாடுகள் அதிகமாகவும் வழங்கிவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை அந்நாட்டின் இருப்பு போன்றவற்றைப் பொருத்து அளவுகளும் மாறுபடுகின்றன. இப்படி போட்டிப்போட்டிக் கொண்டு நிவாரண நிதியை வழங்கி வரும் நாடுகளுக்கு மத்தியில் பல ஏழை நாடுகள் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலைமையும் நீடிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, சுவீடன், ஆஸ்திரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுகுறு தொழிலாளர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் வரைக்கும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றன. மார்ச் மாதம் வரை இந்த 15 நாடுகள் 2.784 ட்ரில்லியன் டாலர்களை நிவாரண நிதியாக அறிவித்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகிலேயே அதிகபடியான கொரோனா நிவாரண நிதியை அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடான 2 ட்ரில்லியன் டாலர்களை மக்களுக்கு விநியோகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகையில் 500 பில்லியன் டாலர்களை பெரிய தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு நிவாரணமாக வழங்க இருக்கிறது. அதேபோல சிறுகுறு தொழில்களுக்கு 349 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு முன்னர் இதே போல 2008 இல் அமெரிக்காவில் நிலவிய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக அங்கு பெரிய அளவிலான வரிச்சலுகை வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் தற்போது, கொரோனா நிவாரணமாக தற்போத 2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் தங்கள் நாட்டில் உள்ள 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் 10000 டாலர்களை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிவருகிறது. ஜெர்மனி அரசு சிறுகுறி தொழில் செய்வோர், கடைகள் வைத்திருப்போர் ஒவ்வொருவருக்கும் 5000 யூரோக்களை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கிவருகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் தங்களது நிலைமையை சரிசெய்து கொள்வதற்காக 550 பில்லியன் யூரோக்களை கடன் தொகையாக வழங்கவும் இருக்கிறது. இந்தத் தொகையை ஜெர்மனியின் KFW வங்கி வழங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல பிரான்ஸ் அரசாங்கம் சிறுகுறு தொழில் செய்யும் 6 லட்சம் மக்களுக்கு 1200 டாலர்களை நிவாரணத் தொகையாக வழங்கிவருகிறது. மேலும் மார்ச் மாதத்தில் செலுத்தவேண்டிய கடன் தொகை போன்றவற்றை செலுத்துவதற்கு கூடுதல் காலத்தையும் வழங்கியிருக்கிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி பெரு நிறுவனங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற 120 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கடன் பத்திரங்களை கொரோனா நிவாரண நிதிக்காக வாங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவின் மத்திய வங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கில் 550 பில்லியன் தொகை வழங்க இருக்கிறது. மேலும் தேவைப்படும் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவீடன் மத்திய வங்கி சிறு நிவனங்களக்கு 52 பில்லியன் டாலர் கடன் தொகையை வழங்க முடிவெடுத்து இருக்கிறது. பிரிட்டன் அரசு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே 39 பில்லியன் டாலர் செலவுத் தொகைக்கொண்ட திட்டத்தை அறிவித்தது. அதன்படி வேலைசெய்ய முடியாமல் ஊரடங்கில் இருந்த மக்களுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை நிவாரணத் தொகையாக வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகள் மக்களுக்கு நிவாரணத் தொகைகளை வழங்கியதோடு சிறுகுறு தொழில் நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கில் அதிகபடியான கடன் தொகையையும் அளித்து உதவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1.70 லட்சம் கோடி கடன் தொகை அறிவிக்கப் பட்டிருந்தாலும் அது ஏற்கனவே மக்களுக்குத் தரவேண்டிய பல்வேறு திட்டங்களின் நிதியாக இருக்கிறது. இது கொரோனா நிவாரண நிதியாக இல்லை. இந்தத் தொகையானது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகைக்குப் போதுமானதாக இல்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.

More News

திருப்பூர் கேரம்போர்டை அடுத்து சேலத்தில் நடந்த ட்ரோன் காமெடி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சிலர் மதிக்காமல் வெளியில் சென்று விளையாடிக்கொண்டு இருப்பதை போலீசார் ட்ரோன்

உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

திரும்பவுமா??? கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் கொரோனா பாதிப்பு!!!

முன்னதாக ஒருவரது உடலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டால் அவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியம்

பிரபல நடிகை ஆரம்பித்து வைத்த 'பில்லோ சேலஞ்ச்': வைரலாகும் புகைப்படங்கள்

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே. ஐஸ்கட்டி குளியல் சேலஞ்ச் முதல் பல சேலஞ்சுகள் இதுவரை டிரெண்ட் ஆகியுள்ள நிலையில்

அண்டை மாநிலத்தின் வெற்றியும் தமிழகத்தின் சுய விளம்பரமும்: கஸ்தூரி ஆவேச டுவீட்

இந்தியாவில் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது.