பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்… ஊரடங்கு தளர்வு குறித்து எச்சரிக்கும் WHO!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரும்பாலான உலக நாடுகள் தற்போது கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதுகுறித்து உலகச் சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 2 பெரிய அலைகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அலறவிட்டு இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் அலையில் இருந்து வெளிவந்த பெரும்பாலான நாடுகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன. மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் அமெரிக்காவில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற அடிப்படை பாதுகாப்பு விஷயங்களுக்கும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள WHOவின் அவசரகால பிரிவின் தலைவர் மைக் ரியான், இதற்கு உலக நாடுகள் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும். உலக நாடுகள் இதுபோன்ற அவசர அவசரமாக முடிவுகளை எடுப்பதால் அடுத்த அலையை மிக விரைவில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இதைத்தவிர டெல்டா வகை வைரஸ் குறித்தும் WHO கடும் எச்சரிச்சை தெரிவித்து வருகிறது. மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட இந்த டெல்டா வகை வைரஸ் இதுவரை 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதனால் உலக நாடுகள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments