கொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்??? எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால் உலகச்சுகாதார நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா novel SARS-CoVid வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இறப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது சீனாவிற்கு வெளியே மற்ற நாடுகளில் 85% பரவியிருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்பின் மையங்களாக தற்போது உருவாகி வருகின்றன. உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனாவிற்கு ஆயிரக்கணக்கில் மக்களைப் பலிக்கொடுத்து கொண்டிருக்கும்போது சில நாடுகள் மட்டும் ஒன்றிரண்டு பாதிப்புகளோடு தப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தை எடுத்துக்கொண்டால் மொத்தம் 54 நாடுகள் இருக்கின்றன. அதில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் 100க்கும் குறைவான நோய்த்தொற்று வழக்குகள் மட்டும் அங்கு பதிவாகி இருக்கிறது.
ஆப்பிரிக்கா நாடுகளில் உலக சுகாதார மையம் அதிகளவு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் என எச்சரித்த நிலையில் அங்கு நிலைமை மிகவும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும், நோய்த்தொற்று இருப்பவர்களும் நேரடியாக சீனாவில் இருந்து திரும்பியவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்தவர்களாக மட்டுமே இருக்கின்றனர். சாதாரண மக்களிடம் இந்நோய்த்தொற்று இன்னும் பரவவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதங்களில் ஆப்பிரிக்காவில் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக உலகச்சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருந்தது. ஆப்பிரிக்க கண்டம் எற்கனவே அதிக தொற்று நோய்க்கு ஆளாகி வரும் நிலையில் முன்னெச்சரிககை அதிகம் தேவை என்று அவசர கால குழுவின் தலைவரான மைக்கேல் யாவ் தெரிவித்து இருந்தார். ஆனால் உலகத்திலேயே ஆப்பிரிக்க கண்டம் தற்போது மிகவும் பாதுகாப்பாக உணரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தென் ஆப்பிரிக்கா- இந்நாட்டில், மார்ச் 5 முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவர் நோய் அறிகுறியுடன் இருந்ததை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1353 பேருக்கு நோய்த்தொற்றும் 5 பேர் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.
அல்ஜீரியா – முதல் வழக்கை பிப்ரவரி 25 அன்று பதிவுசெய்தது. அல்ஜீரியா வந்த இத்தாலி நாட்டவர் ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பதை அந்நாடு உறுதிசெய்தது. அவருடன் பயணம் செய்த மற்றொருவருக்கும் வைரஸ் பரவியது. Who கொரோனா அபாயம் இருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக அல்ஜீரியாவையும் குறிப்பிட்டுச் சொல்லியது. எனவே கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது நோய், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 716 பேருக்கு நோய்த்தொற்றும் 44 உயிரிழப்பும் இந்நாட்டின் கணக்குகளாக இருக்கின்றன.
நைஜீரியா – பிப்ரவரி 27 அன்று தனது முதல் வழக்கை பதிவு செய்த இந்நாட்டில் 151 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேமரூன்- மார்ச் 6 அன்று கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் பிரான்சில் இருந்து திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 233 பேருக்கு நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
காங்கோ- எபோலோ வைரஸ் பரவிய போது காங்கோ கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காங்கோ இருந்தது. மார்ச் 10 அன்று தனது முதல் வழக்கை பதிவு செய்தது. பாதிக்கப்பட்டவர் பிரான்சில் இருந்து திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 19 பேர் நோய்த்தொற்றுடன் இருக்கின்றனர். உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக்குடியரசில் 1109 பேருக்கு நோய்த்தொற்றும் 51 பேர் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.
மொராக்கோ- முதல் கொரோனா வைரஸ் வழக்கு மார்ச் 2 அன்று உறுதி செய்யப்பட்டது. இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 81 பேருக்கு நோய்த்தொற்றும் இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
எகிப்து – கொரோனா நோய்த்தொற்று பிப்ரவரி 14 அன்று பதிவு செய்யப்பட்டது. நைல் நதியில் பயணம் செய்துவந்த ஒரு கப்பலில் பலருக்கு நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு பலர் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர். முதல் மரணத்தை மார்ச் 8 அன்று பதிவுசெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 710 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 46 பேர் உயரிழந்துள்ளனர்.
மக்கள்தொகை நெருக்கமாக உள்ள இடங்களான மெக்சிகோ, ரஷ்யா, உக்ரைனிலும் குறைவான வழக்குகளே பதிவாகியிருக்கின்றன. மெக்சிகோ – 130 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1215 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 145 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில் இதுவரை சில வழக்குகள் தான் பதிவாகியிருக்கிறது. மாஸ்கோவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பது ஜனவரி 30 இல் அறிவிக்கப்பட்டது. ரஷ்யா, சீனாவில் கொரோனா பரவத்தொடங்கிய உடனே தனது நாட்டு எல்லைகளை மூடிவிட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. இதுவரை 2777 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் 43 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நிலையில் மார்ச் 3 இல் முதல் வழக்கை பதிவு செய்தது. ஜப்பான் டைமண்ட் கப்பலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 2 பேருக்கும் நோய்த்தொற்று பரவியது. மேலும் 669 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தென் கொரியா சாமர்த்தியமாக கொரோனாவில் இருந்து தப்பித்து இருக்கிறது. டேகுசிட்டி கியோங்புக், கியோங்கி, கியோங்சாங், சியோல் மற்றும் பூசன் போன் பகுதிகளில் அதிக பாதிப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டங்கள், விமான சேவை என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டில் 9887 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் 165 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
மியான்மர் - மார்ச் 26 வரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத நாடுகளில் ஒன்றாக மியான்மர் இருந்தது. தற்போது அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயது இளைஞர், மற்றும் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 26 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மியான்மரில் இதுவரை 15 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொசோவா - மார்ச் 13 வரை எந்த கொரோனா வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. கொசாவாவில் கொரோனா வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையிலும் அந்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செர்பியா, வடக்கு மாசிடோனியா போன்ற அண்டை நாடுகளில் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தபின்னர் கொசோவா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்லாந்து போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்தை உடனயாக தடை செய்தது. மேலும், பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறையும் அளிக்கப்பட்டது.
நமீபியா- மார்ச் 14 அன்று தான் இந்நாட்டில் முதல் கொரோனா வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய ஒரு தம்பதியினரிடம் தான் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 14 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Eswatini- மார்ச் 14 அன்று இந்நாட்டில் முதல் கொரோனா வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுவும் சீனாவில் இருந்து திரும்பிய பெண் ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இதுவரை 9 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
உருகுவே- மார்ச் 13 வரை இந்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று இல்லை. இத்தாலியின் மிலன் நகரில் இருந்து திரும்பிய 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை மார்ச் 13 அன்று உறுதிசெய்தனர். இதுவரை 338 பேருக்கு நோய்த்தொற்றும் 2 பேர் உயிரிழப்பும் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளன.
சூடான் - ஐக்கிய அரபுநாடுகளில் இருந்து திரும்பி வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மார்ச் 13 அன்று இறந்தார். உடனே அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டன. அதற்கு முன்னதாக ஜனவரி 29 அன்று சீனாவில் இருந்து திரும்பிய இரண்டுபேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை இந்நாட்டு சுகாதாரத்துறை உறுதி செய்தது. அந்நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் நோய்ப்பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
எத்தோப்பியா -முதன் வழக்கு மார்ச் 13 அன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை 29 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்பு எதுவும் நடைபெற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கஜகஜஸ்தான்- முதல் கொரோனா வைரஸ் வழக்கு மார்ச் 13 அன்று பதிவுசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் ஜெர்மனியில் இருந்து திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடனே விமான சேவை ரத்து, பள்ளி கல்லூரி விடுமுறை எனப் பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 375 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் 3 உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.
கென்யா- மார்ச் 13 அன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனே விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டன. பொது கூட்டங்கள் நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 81 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ghana - நார்வேயில் இருந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது மார்ச் 12 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதுவரை 195 பேருக்கு நோய்த்தொற்றும் 5 உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளன.
வடகொரியாவில் இதுவரை கொரோனா வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
Virginia Common Wealth University பேராசிரியாரான Sarah Raskin குறைவான வழக்குகள் பதிவான நாடுகளைக் குறித்து, செல்வந்த நாடுகள் அதிக பயணங்களை மேற்கொள்வதால் கொரோனா தொற்றில் மாட்டிக்கொண்டு விட்டனர். மேலும், கொரோனா அதிகமாக பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் பரவியிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். சில வல்லுநர்கள் கொரோனா நோய்த்தொற்றில் பருவகாலமும் முக்கிய பங்குவகிப்பதாகத் தெரிவிக்கின்றனர். உலகின் வட அரைகோளப்பகுதிகளில் அதிகபடியான வெப்பநிலை நிலவுகிறது. இது கொரோனா நோய்த்தொற்றைச் சிதறடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது எனவும் கூறப்படுகிறது.
தற்போது வரைக்கும் அதிக பாதிப்பு ஏற்படுள்ள நாடுகளில் வெப்பநிலை மிதமாக இருக்கிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மனித நோய்எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருந்தால் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு சில நாடுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும் நிலையில் அந்நாட்டின் சுகாதார வழிமுறைகள், விமான போக்குவரத்து, திரையிடல், பொதுமக்களின் நடமாட்டத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம் நோய்த்தொற்றில் இருந்து பல நாடுகள் தப்பித்து இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout