ஐபிஎல் டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக அந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை நிறுத்த ஒருசில அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டம் செய்தன. இருப்பினும் போலீஸ் பாதுகாப்பின்மூலம் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதால் இனிவரும் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை காவல்துறை கூறிவிட்டது. இதனால் வேறு வழியின்றி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் நேற்று முடிவு செய்தது. இந்த போட்டிகள் திருவனந்தபுரம், புனே போன்ற இடங்களில் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் சென்னையில் வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி ரத்தானதை தொடர்ந்து டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போட்டிகள் ரத்தானது சென்னை ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com