ஐபிஎல் டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக அந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை நிறுத்த ஒருசில அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டம் செய்தன. இருப்பினும் போலீஸ் பாதுகாப்பின்மூலம் போட்டி நடைபெற்றது. 

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதால் இனிவரும் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை காவல்துறை கூறிவிட்டது. இதனால் வேறு வழியின்றி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் நேற்று முடிவு செய்தது. இந்த போட்டிகள் திருவனந்தபுரம், புனே போன்ற இடங்களில் நடத்தப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் சென்னையில் வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி ரத்தானதை தொடர்ந்து டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போட்டிகள் ரத்தானது சென்னை ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

More News

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜிமிக்கி கம்மல் ஷெரில்

ஜிமிக்கி கம்மல் என்ற ஒரே பாடலின் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனவர் ஷெரில். கல்லூரி பேராசிரியரான இவர் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடிய நடனம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

போராட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பிய ஆர்.ஜே.பாலாஜி

ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

அல்ஜீரியா நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் அதில் பயணம் செய்த 257 அல்ஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை

காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும்