மதிப்பீடே தவறாக இருக்கிறது… ஒலிம்பிக்கில் சர்ச்சையை கிளப்பும் மேரி கோம்… என்ன காரணம்?

“அயன் லேடி“ எனக் கொண்டாடப்படும் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இதற்கு முன்பு, 6 முறை சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்றவர், 9 பதக்கங்கள் பெற்றவர். தனது ஒப்பற்ற விளையாட்டு திறமையால் உலக வீராங்கனைகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர். அவர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியில் தோல்வி அடைந்து இருக்கிறார்.

இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைக்கு வைக்கப்படும் மதிப்பீட்டு புள்ளிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் போட்டி நடைபெறுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர், தன்னுடைய ஆடையை ஏன் மாற்றச் சொன்னார்கள்? இதற்கு என்ன காரணம்? என்றும் அவர் தனது டிவிட்டரில் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்த கேள்விகளை அவர் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததோடு இந்திய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜிஜு ஆகியோரையும் டேக் செய்துள்ளார். இதனால் மேரி கோம் எழுப்பி இருக்கும் இந்தச் சர்ச்சை தற்போது சோஷியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

குத்துச்சண்டை விதிகள்-

குத்துச் சண்டை போட்டி என்பது பொதுவாக 3 சுற்றுகளுடன் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிற்கும் 3 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த 3 சுற்றுக்கு இடையிடையே ஒரு நிமிடம் இடைவேளையும் கொடுக்கப்படுகிறது. மேலும் பெண்கள் குத்துச் சண்டைபோடும்போது அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு இது கட்டாயமல்ல.

இதைத்தவிர இரண்டு முறைகளைப் பின்பற்றி குத்துச்சண்டையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.  ஒன்று நாக் அவுட். அதாவது எதிராளியை ஒரு போட்டியாளர் முகத்தில் பஞ்ச் பண்ணி வீழ்த்திவிட்டால் அவர் நாக் அவுட்டானதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படி நாக் அவுட்டானாலும் அவர் எழுந்து கொள்வதற்கு 10 நொடிகள் வரை அவகாசம் வழங்கப்படும்.

இப்படி இல்லாமல் ஒரு போட்டியாளர் எதிராளியை தொடர்ந்து பஞ்ச் செய்யும்போது அவர் கொடுக்கும் பஞ்ச் எந்த இடத்தில் படுகிறது, அவருடைய பஞ்சில் இருக்கும் தனிச்சிறப்பு என்ன, அவர் என்ன தவறு செய்கிறார் என்பதைப் பொறுத்தே போட்டி நடுவர்கள் புள்ளிகளை வழங்குகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு போட்டிக்கும் 5 நடுவர்கள் ஒவ்வொரு சுற்றுக்கும் 10 புள்ளிகள் என்று கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனையான மேரி கோம் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கொலம்பியா வீராங்கனை வேலன்சியாவை எதிர்கொண்டார். இரண்டு சுற்றுகளில் மேரி கோமே வெற்றிப்பெற்றார். ஆனால் முடிவை அறிவிக்கும்போது கொலம்பியா வீராங்கனை வேலன்சியா வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலிறுதிக்கு தகுதிப் பெறாமலேயே தற்போது மேரி கோம் போட்டியை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் வெற்றிப் பெற்றதாகவே நினைத்திருந்தேன். அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் டிவிட்டர் பக்கத்தை படித்த பிறகே நான் தோல்வி அடைந்தையே தெரிந்து கொண்டேன். இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்ற நான் எப்படி இந்தப் போட்டியில்  தோல்வியைத் தழுவினேன். அதைத்தவிர போட்டிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது என்னை ஏன் உடையை மாற்றச் சொன்னார்கள் எனக் ஆதங்கமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் புள்ளி மதிப்பீட்டில் தவறு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மேரி கோம் கலந்து கொண்ட போட்டியில் நடந்தது என்ன என்பது குறித்த விவாதம் சோஷியல் மீடியாவில் தற்போது சூடு பிடித்து இருக்கிறது. காலிறுதி போட்டிக்கு முந்தைய போட்டியில் கலந்துகொண்ட மேரி கோமிற்கு முதல் சுற்றில் ஒரு நடுவர் மட்டுமே அதிக புள்ளிகளை வழங்கி இருந்தார். மற்ற 4 நடுவர்களும் வேலன்சியாவிற்கே அதிகப் புள்ளிகளை கொடுத்து இருந்தனர்.

அடுத்த சுற்றில் 3 நடுவர்கள் மேரி கோமிற்கு அதிகப் புள்ளிகளை வழங்கி இருந்தனர். ஆனால் இந்தச் சுற்றிலும் 2 அதிகப் புள்ளிகளை வேலன்சியா பெற்றிருந்தார். இதனால் 3 அதிகமான புள்ளிகளைப் பெற்று தற்போது வேலன்சியா அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார். ஆனால் பலமுறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மேரி கோம் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த அதிர்ச்சியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குத்துச்சண்டையில் எப்படி புள்ளிகள் மதிப்பிடப் படுகிறது. இந்தப் மதிப்பீடு சரியானதுதானா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேரி கோம் சாதனை-

அயன் லேடி என அழைக்கப்படும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்று தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கத்தை பெற்றுத்தந்தார்.

இதைத்தவிர கடந்த 2001 ஆம் ஆண்டு உலகச் சாம்பியன்ஷிப் பட்டம். அடுத்து 2019 ஆம் ஆண்டு வரை உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்களை இந்தியாவிற்காக வாங்கிக் குவித்துள்ளார். இத்தனை ஏறுமுகம் கொண்ட அவரால் கடந்த 2014 கிளாஸ்கோவிலும் பின்னர் ரியோ ஒலிம்பிக்கிலும் தகுதி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் சருக்கலை சந்தித்து இருக்கும் மேரி கோமிற்கு மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு ஆறுதல் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்  “எங்களுக்கு நீங்கள்தான் வெற்றியாளர், நடுவர்களுக்கு வேறு கணக்கீடு இருந்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

More News

சிம்புவின் மாநாடு படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நிறுத்தம்?

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது

போனிகபூரை அடுத்து மீண்டும் பிரபல நிறுவனத்துடன் இணைகிறாரா அஜித்?

தல அஜித் நடித்து வரும் 60வது திரைப்படமான 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தல 61' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான்

கர்ப்பமாக இருக்கும்போது அண்டர்வாட்டர் போட்டோஷூட் எடுத்த நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா' என்பதும் இந்த  சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீரியலிலல் வெண்பா

யாஷிகா கார் விபத்து: ஆண் நண்பர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் சென்ற கார்

ஜார்ஜியாவை அடுத்து மீண்டும் வெளிநாடு பறக்கும் 'பீஸ்ட்' குழுவினர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.